குமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் தேவபிரசன்னம்
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி வந்து அம்மனை வழிபடுவதால் பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகிறது.
கடந்த 2ம் தேதி இந்த கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் கோயிலின் கருவறை மேற்கூரை முழுவதும் எரிந்து நாசமானது. இதையடுத்து கோயிலில் இரும்பிலான தற்காலிக மேற்கூரை அமைக்கும் பணிகள் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் சிவகுரு பிரபாகரன் மேற்பார்வையில் நடந்து வருகிறது. இதையடுத்து பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று கோயிலில் தேவபிரசன்னம் பார்ப்பதற்கு குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்திருந்தது. கேரள மாநிலம் வயநாடை சேர்ந்த ஜோதிடர் ஸ்ரீநாத், திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் முன்னாள் மேல்சாந்தி விஷ்ணு நம்பூதிரி ஆகியோர் தேவபிரசன்னம் பார்க்க தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் மண்டைக்காடு கோயில் வந்து நிகழ்ச்சியை தொடங்கினர். முன்னதாக பாறசாலை ராஜேஷ் சிறப்பு கணபதி ஹோமம் நடத்தினார்.
தேவபிரசன்னத்தில் கோயிலில் ஆச்சார அனுஷ்டானங்கள் கடைபிடிக்கப்படவில்லை. ஸ்ரீ சக்கரத்திற்கு பூஜை நடக்கவில்லை. சுத்தமான குடிநீர் இல்லை. சுயம்புவாக தோன்றிய புற்று வளர்ந்து வருவதால் தான் வாஸ்துபடி கட்டமைப்பை விரிவாக்கம் செய்யவே கோயிலில் தீ விபத்து ஏற்பட்டது. உட்பட பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
2-வது நாளாக தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி தொடங்கி நடந்து வந்தது. தேவ பிரசன்னத்தில் பரிகார பூஜைக்கான விபரங்கள் கூறினர். தேவ பிரசன்னத்தில் தேவசம் கண்காணிப்பாளர் செந்தில்குமார், மராமத்து பொறியாளர் ஐயப்பன் ஆய்வாளர் கோபாலன் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags :