பீகார் முதல்வருக்கு சவால் விட்ட பிரசாந்த் கிஷோர்
ஜேடியு எம்பி ஹரிவம்ஷுக்கு பாஜகவுடன் எந்த தொடர்பும் இல்லை என்றால், மாநிலங்களவை துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் கூறினார். தற்போது ஆர்ஜேடியுடள் கூட்டணியில் இருக்கும் பீகார் முதல்வர், எம்பி ஹரிவம்ஷ் மூலம் பாஜகவுடன் உறவை தொடர்கிறது என்று பிரசாந்த் கிஷோர் குற்றம்சாட்டியுள்ளார்.“பாஜக உடனான கூட்டணியை முடித்த பிறகு, நிதிஷ்குமார் ஹரிவன்ஷை பதவி விலகச் சொல்லியிருக்க வேண்டும். பதவியை காலி செய்ய தயங்கியிருந்தால், அவரை ஜேடியுவில் இருந்து நீக்கியிருக்கலாம். ஆனால் நிதிஷ் எதிர்காலத்திற்கான வாய்ப்பைத் திறக்க முயன்றார்,' என்று பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டினார்.பிரசாந்த் கிஷோர் ஜேடியு தேசிய துணைத் தலைவராக சில காலம் பணியாற்றினார். ஆனால் குடியுரிமை (திருத்தம்) சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட விவகாரங்களில் எதிர் கருத்து தெரிவித்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
Tags :