குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவரும் தமிழின்பால் பெரும்பற்று கொண்டவருமான இலக்கியச் செல்வர் அய்யா குமரி அனந்தன் அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.
'தகைசால் தமிழர்' அய்யா குமரி அனந்தன் அவர்களது மறைவால் வாடும் அருமை சகோதரி தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், உறவினர்கள், காங்கிரஸ் பேரியக்கத் தொண்டர்கள், அரசியல் மற்றும் இலக்கிய வட்டங்களைச் சேர்ந்த சொந்தங்கள் என அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்" என முதலமைச்சர் தெரிவித்திருந்த நிலையில் குமரி அனந்தன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்,மேலும் மறைந்த இலக்கியச் செல்வர் குமரி அனந்தனின் திருவுடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Tags : குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.