மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு காவல்துறை விசாரணை

by Staff / 08-04-2023 02:49:32pm
மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு காவல்துறை விசாரணை

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மதுரவாசல் ஏரியில் ஒதுக்குப்புறமாக எரிந்த நிலையில் மனித எலும்புக்கூடு இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறைக்கும், வருவாய்துறைக்கும் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியபாளையம் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். சில நாட்களுக்கு முன் எரிக்கப்பட்டு எலும்புக்கூடாக இருந்தது தெரியவந்தது. கையில் வளையல் அணிந்திருந்ததால் பெண் ஒருவர் கொலை செய்து எரிக்கப்பட்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனர். எரிந்த நிலையில் இருந்த எலும்புக்கூடை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..

 

Tags :

Share via

More stories