.
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டதை கண்டித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் முன்பாக இன்று பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் கமேனியின் உருவம் பொறித்த பதாகைகளை ஏந்தி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். அசம்பாவிதங்கள் எதுவும் நிகழ்ந்து விடாது வண்ணம் தூதரத்தை சுற்றி 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டு இரும்பு தடுப்புகள் மூலம் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து லடா க் ஜம்மு காஷ்மீர் லக்னோ மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களிலும் போராட்டம் மற்றும் இரங்கல் ஊர்வலங்கள் நடைபெற்று வருகின்றன.
Tags :














.jpg)




