சரக்கு ரயில் தீப்பிடித்து எரிந்த விபத்து 17 மணி நேரத்திற்கு பின்பு ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டன.

by Staff / 14-07-2025 08:14:57am
சரக்கு ரயில் தீப்பிடித்து எரிந்த விபத்து 17 மணி நேரத்திற்கு பின்பு ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டன.

திருவள்ளூர் அருகே டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் நேற்று (ஜூலை 13) தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்து காரணமாக அவ்வழியாக செல்லவிருந்த ரயிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், 17 மணி நேரத்திற்கு பின்பு ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் மின்சார ரயில்கள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டு வருகின்றன. இன்று மாலை முழுமையாக பணிகள் நிறைவு பெற்று ரயில் போக்குவரத்து வழக்கம் போல் நடைபெறும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags : Trains resumed operations 17 hours after a freight train caught fire.

Share via