நடுக்கடலில் படகு எஞ்சின் பழுதாகி இலங்கை எல்லைக்குச் சென்ற  9 மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு.

by Editor / 07-01-2025 10:15:59am
நடுக்கடலில் படகு எஞ்சின் பழுதாகி இலங்கை எல்லைக்குச் சென்ற  9 மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு.

நாகை மாவட்டம் நாகூர் சம்பா தோட்டம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான விசைப்படகில் செல்வமணி உள்ளிட்ட ஒன்பது பேர் கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி  கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.படகு இஞ்சினில் ஏற்பட்ட பழுது காரணமாக நடுக்கடலில் படகுடன் மீனவர்கள் மாயமானதாகவும் அவர்களை மீட்டுத் தர வேண்டி கோரிக்கை எழுந்தது. படகு இஞ்சினில் ஏற்பட்ட பழுது காரணமாக இலங்கை எல்லைக்கு சென்ற தமிழக மீனவர்களை  உரிய அனுமதியுடன் மீன்வளத் துறையினர் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் நள்ளிரவு பாதுகாப்பாக நாகை துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.

 

Tags : நடுக்கடலில் படகு எஞ்சின் பழுதாகி இலங்கை எல்லைக்குச் சென்ற  9 மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு.

Share via