காதல் தோல்வி - இளைஞர் தற்கொலை

by Staff / 17-05-2024 12:10:36pm
காதல் தோல்வி - இளைஞர் தற்கொலை

சென்னை வளசரவாக்கம் பொன்னி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்கண்ணா (25). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த சில தினங்களாக வீட்டில் இருந்து பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் (மே 15) இரவு வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், தினேஷின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது, காதல் தோல்வி காரணமாக விரக்தியில் இருந்த தினேஷ் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

 

Tags :

Share via