100 கோடி இழப்பீடு; கார்கேவுக்கு வக்கீல் நோட்டீஸ்

by Staff / 07-05-2023 02:24:37pm
100 கோடி இழப்பீடு; கார்கேவுக்கு வக்கீல் நோட்டீஸ்

பஜ்ரங் தள் அமைப்பை அவமதித்ததற்காக 100 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு விஎச்பி (விஸ்வ ஹிந்து பரிஷத்) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீஸ் கிடைத்த 14 நாட்களுக்குள் ரூ.100.10 கோடி செலுத்த வேண்டும் என்று விஎச்பி சண்டிகர் பிரிவு மற்றும் இளைஞர் குழு பஜ்ரங் தள் நோட்டீஸ் கொடுத்துள்ளன. பஜ்ரங்தளம் அமைப்பை பாப்புலர் பிரண்ட் மற்றும் சிமி போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் ஒப்பிடுவதற்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி, வாக்குறுதி பட்டியலில் இந்த அமைப்புகள் பற்றிய தடை அறிவிப்பு இடம்பெற்றது.

 

Tags :

Share via