ஆழ்வார்குறிச்சியில் இருந்து அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட சாமி சிலைகள் ஆழ்வார்குறிச்சி வந்தது.
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி ஆவுடை அம்மாள் சமேத நரசிங்கநாத சுவாமி திருக்கோவிலில் இருந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க நாட்டின் மியூசியத்தில் இருந்து பல லட்சம் மதிப்புள்ள இரு உலக சிலைகள் மீட்கப்பட்டு மீண்டும் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் உள்ள அருள்மிகு ஆவுடை அம்மாள் சமேத நரசிங்கநாதர் திருக்கோவிலில் 1985 -ம் ஆண்டு பல லட்சம் மதிப்புள்ள கங்காளநாதர், அதிகாரநந்தி ஆகிய இரு உலோக சிலை கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் அந்த சிலைகள் அமெரிக்கா நாட்டிலுள்ள மியூசியத்தில் இருப்பது கண்டறியப்பட்டது.இதன் தொடர்ச்சியாக அமெரிக்கா நாட்டிலுள்ள மியூசியத்தில் இருந்து 37 ஆண்டுகளுக்கு பிறகு அந்த சிலைகள் மீட்கப்பட்டு மீண்டும் ஆழ்வார்குறிச்சி திருக்கோவிலுக்கு கொண்டுவரப்பட்டதால் பக்தர்கள் வரவேற்ப்பு அளித்தனர்.
Tags : Sami idols smuggled from Alwarkurichi to the United States came to Alwarkurichi.