பிரதமர் கேரளாவுக்கு முன்கூட்டியே பயணம்

முன்னதாக ஏப்ரல் 25 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடியின் கேரளப் பயணம், கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் காரணமாக ஏப்ரல் 24ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, கொச்சியில் நடைபெறும் பேரணியில் பங்கேற்கும் மோடி, சேக்ரட் ஹார்ட் கல்லூரி மைதானத்தில் வைப்ரன்ட் யூத் ஃபார் மோடிஃபையிங் கேரளா நடத்திய இளைஞர் மாநாடான 'யுவம்' நிகழ்ச்சியில் இளைஞர்களுடன் கலந்துரையாடுகிறார். சமீபத்தில் பாஜகவில் இணைந்த மூத்த காங்கிரஸ் தலைவர் ஏ.கே.ஆண்டனியின் மகன் அனில் கே.ஆண்டனி பிரதமரை சந்திப்பார்.
Tags :