அடிப்படை பிரச்சினைகளுக்கு முன்னுரிமை திருப்பூர் மேயராக தினேஷ்குமார்

திருப்பூர் மாநகராட்சி மேயராக தினேஷ்குமார் இன்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். திருப்பூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிட்டு 37 கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர். 2 சுயேச்சை கவுன்சிலர்கள் மற்றும் அணிமாறிய அதிமுக கவுன்சிலர் ஒருவர் என மொத்தம் 40 பேர் பங்கேற்று மேயர் வேட்பாளர் தினேஷ்குமாருக்கு ஆதரவளிக்க, அவர் போட்டியின்றி மேயராக தேர்வு செய்யப்பட்டார்.
மேயர் தினேஷ்குமார் தெரிவிக்கும் போது திருப்பூர் மாநகராட்சியை தமிழகத்தின் முன்னோடி மாநகராட்சியாக மாற்றிக் காட்டுவோம். அடிப்படை பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்என்று புதிய மேயராக இன்று பொறுப்பேற்ற தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
Tags : Dinesh Kumar is the mayor of Tirupur, giving priority to fundamental issues