5 புதிய விளையாட்டு திடல்கள் , 5 நகர்ப்புர ஆரம்ப சுகாதாரநிலையக் கட்டடங்கள் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தலைமைச்செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் சேவைக்கான “விரைவு துலங்கல் குறியீடு - QR Code” மென்பொருள் செயலியை தொடங்கி வைத்ததோடு,..நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் ரூ. 561.26 கோடி செலவிலான 14 முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் திறந்து வைத்து, ரூ. 201 கோடி மதிப்பீட்டிலான 9 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, .நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ரூ. 35.79 கோடி செலவில் பள்ளிகள் புதுப்பிக்கும் பணிகள், 19 புதிய பூங்காக்கள் அமைக்கும் பணிகள், ஒரு பூங்கா மறு சீரமைக்கும் பணி, 5 புதிய விளையாட்டு திடல்கள் அமைக்கும் பணிகள், 5 நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்கள் கட்டும் பணிகள் ஆகிய முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Tags :