இந்திய விமானப்படையின் உகோய் போர் விமானம் விபத்து

by Staff / 04-06-2024 05:48:13pm
இந்திய விமானப்படையின் உகோய் போர் விமானம் விபத்து

இந்திய விமானப்படையின் உகோய் போர் விமானம் சற்றுமுன் விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த விமானி மற்றும் துணை விமானி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் இந்திய விமானப்படையின் சுகோய் போர் விமானம் இன்று  விபத்துக்குள்ளானதில் விமானி மற்றும் துணை விமானி பத்திரமாக வெளியேற்றினர். அவர்கள் மேல் சிகிச்சைக்காக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விமானம் நிஃபாத் தாலுகாவின் ஷிராஸ்கான் கிராமத்திற்கு அருகில் உள்ள வயல்வெளியில் விழுந்து நொறுங்கியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo