கிராமசபை கூட்டத்தில் அமைச்சரிடம் மதுவிலையை குறைக்க சொன்ன மதுப்பிரியர்

by Editor / 01-05-2022 11:43:31am
கிராமசபை கூட்டத்தில் அமைச்சரிடம் மதுவிலையை குறைக்க சொன்ன மதுப்பிரியர்

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே  அருகே காவாக்குளத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு தமிழக பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு பொது மக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.இந்த நிலையில் அமைச்சர் பங்கேற்ற கிராமசபை கூட்டத்தில் மதுபிரியர் ஒருவர் பங்கேற்று டாஸ்மாக்கில் மதுவிலை அதிகரித்து ஒரு குவாட்டர் பாட்டில் 200க்கு விற்கப்படுவதால் மதுப்பிரியர்கள் பாதிக்கப்படுவதாகவும் மது விலையை குறைக்கக்கோரி அங்கு திரண்டு இருந்த மக்கள் மத்தியில் அவர் அமைச்சரிடம் கோரிக்கை வைத்து அடம்பிடித்த மதுப்பிரியரால் கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
 

 

Tags :

Share via

More stories

Logo