400 கிலோ எடையிலும் 21 அடி உயரத்திலும் ராட்சத அரிவாள்

by Editor / 14-12-2023 10:02:01am
 400 கிலோ எடையிலும் 21 அடி உயரத்திலும் ராட்சத அரிவாள்

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் பக்தர்கள் கோயில்களுக்கு நேர்த்திகடனாக செலுத்தும் ராட்சத அரிவாளை  பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.

திருப்பாச்சேத்தியில் உள்ள அருவா பட்டறையில் கட்டனூரில் கட்டப்பட்டு வரும் கருப்புச்சாமி கோயிலுக்காக 400 கிலோ எடையிலும் 21 அடி உயரத்திலும் ராட்சத அரிவாள் தயாரிக்கப்படுகிறது. கடந்த 15 நாட்களாக மூன்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இணைந்து இந்த அருவாவை தயாரித்துள்ளனர். வெயிலிலும் மழையிலும் தாக்குபிடிக்கும் வண்ணம் துருப்பிடிக்காத பெயிண்ட் பூசப்பட்டுள்ளது.

 

Tags : 400 கிலோ எடையிலும் 21 அடி உயரத்திலும் ராட்சத அரிவாள்

Share via

More stories