அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி போலீஸ் காவல் மாலையுடன் நிறைவு.
திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் 40 லட்சம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இதை அடுத்து கடந்த 12ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திண்டுக்கல் தலைமை நீதித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று விசாரணை முடித்து மாலை 5 மணிக்குள் திண்டுக்கல் நீதிமன்றத்தில் அங்கித்வாரி ஆஜர் படுத்தப்பட உள்ளார். லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அங்கித் திவாரியுடன் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்றும், மேலும் பல்வேறு தகவல்கள் இந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் விசாரணை முடிவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தநிலையில் அவருக்கு ஜாமீன் கோரிய வழக்கும் விசாரணைக்கு வருகிறது.
Tags : அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி போலீஸ் காவல் மாலையுடன் நிறைவு.