திருவண்ணாமலை கிரிவல பாதையில் அமைந்துள்ள ரமணர் ஆசிரமத்தில் ரமண பகவானின் 75- வது ஆராதனை விழா...

by Editor / 25-04-2025 11:41:02pm
திருவண்ணாமலை கிரிவல பாதையில் அமைந்துள்ள ரமணர் ஆசிரமத்தில் ரமண பகவானின் 75- வது ஆராதனை விழா...

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள ரமணாஸ்ரமத்தில் ரமண பகவானின் 75 வது ஆராதனை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.இந்நிலையில் இன்று ரமணர் ஆசிரமத்தில் ரமண பகவானுக்கு பால் தயிர் சந்தனம் பஞ்சாமிர்தம் தேன் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து ரமண பகவானுக்கு தாமரைப் பூ, மல்லிகை பூ, ரோஜா பூ உள்ளிட்ட பல்வேறு வகையான வண்ண வண்ண மலர்களை கொண்டு மலர் மாலைகள் தொடுத்து, வேத விர்பனர்கள் வேத மந்திரங்கள் முழங்க, நாதஸ்வர கச்சேரி ஒலிக்க பகவானுக்கு நட்சத்திர ஆரத்தியும், பஞ்ச கற்பூர ஆரத்தியும் காண்பிக்கப்பட்டது.

இந்த ஆராதனை விழாவில் பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான ரமண பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ரமணரின் 75-வது ஆராதனை விழாவில் கலந்து கொண்ட திரைப்பட நடிகை சுகன்யா ரமண பகவானின் பாடல்களைப் பாடி மனமுருக சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து ஆசிரமத்திற்கு வருகை தந்த அனைத்து ஆன்மீக பக்தர்களுக்கும் ஆசிரமம் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.
 

 

Tags : திருவண்ணாமலை கிரிவல பாதையில் அமைந்துள்ள ரமணர் ஆசிரமத்தில் ரமண பகவானின் 75- வது ஆராதனை விழா...

Share via