ஹெச்.ராஜாவை கண்டித்து பாஜகவினர் ராஜினாமா

by Editor / 22-06-2021 09:46:32am
ஹெச்.ராஜாவை கண்டித்து பாஜகவினர் ராஜினாமா

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவைக் கண்டித்து அக்கட்சியின் சிவகங்கை மாவட்டத் தலைவர், தேவகோட்டை, காரைக்குடி நகரத் தலைவர்கள் உட்பட பலரும் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர்.

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா 2019 நாடாளுமன்ற தேர்தலிலும், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் தோல்வி அடைந்தார். இந்நிலையில் தனது தோல்விக்குக் கட்சி நிர்வாகிகள் சிலர்தான் காரணம் என்று ஹெச்.ராஜா கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து காரைக்குடி நகரத் தலைவர் சந்திரன், சாக்கோட்டை தெற்கு ஒன்றியத் தலைவர் பாலா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் மாவட்டத் தலைவர் செல்வராஜிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தனர். இந்நிலையில் திடீரென பாஜக மாவட்டத் தலைவர் செல்வராஜூம் மாநிலத் தலைமைக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளார் .

ஹெச் . ராஜா தனது தோல்விக்கு என்ன காரணம் என்பதை ஆராயாமலும் , சுயபரிசோதனை செய்து கொள்ளாமலும் , தான் செய்த தவறை மறைப்பதற்காக தங்கள் மீது குற்றம் சாட்டுகிறார் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர் .

தேவகோட்டை , காரைக்குடி நகர நிர்வாகிகள் , கண்ணங்குடி , சாக்கோட்டை ஒன்றிய நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளனர் . இன்னும் பலர் தொடர்ந்து ராஜினாமா கடிதம் கொடுத்து வருகின்றனர.

 

Tags :

Share via

More stories