நீர்நிலைகளின் காவலன் பனை மரம் வெட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம்.
பனை மரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறுவது கட்டாயம் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், “தவிர்க்க இயலாத சூழலில் பனை மரங்களை வெட்ட நேரிட்டால் ஆட்சியர் அனுமதி பெறுவது கட்டாயம். பனை மரங்களை வெட்ட 'உழவர் செயலி'யில் விண்ணப்பிக்க வேண்டும். வெட்டப்பட்ட பனை மரங்களை வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லும்போது, அனுமதி கடிதம் காட்டாயம் வேண்டும். நீர்நிலைகளின் காவலன் என்று அழைக்கப்படும் பனை மரங்களை பாதுகாக்கும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என குறிப்பிட்டுள்ளது.
Tags : நீர்நிலைகளின் காவலன் பனை மரம் வெட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம்.



















