“கல்விதான் உண்மையான அடையாளம்” - முதலமைச்சர் அறிவுரை

by Staff / 14-06-2024 03:51:52pm
“கல்விதான் உண்மையான அடையாளம்” - முதலமைச்சர் அறிவுரை

பள்ளிக் கல்வி துறையின் ஐம்பெரும் விழாவில் இன்று  கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்கள் முன் உரையாடினார். அப்போது பேசிய அவர், “படிக்காமலும் பெரிய ஆள் ஆகலாம் என யாரோ ஒன்றிரண்டு பேரை பார்த்து தவறான பாதைக்குச் செல்லக்கூடாது. கல்வி தான் உண்மையான, பெருமையான அடையாளம் என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். கல்வி எனும் நீரோடை முழுதாகப் பாய்வதற்கு இந்த அரசு உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்” என்றார்.

 

Tags :

Share via