பேருந்து சக்கரத்தில் சிக்கி மாணவி பலி

தெலங்கானா ஹைதராபாத் மதுரா நகர் பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்தின் முன் பக்க படிக்கட்டில் இருந்து மாணவி ஒருவர் இறங்கினார். அப்போது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் முன் பக்கம் மற்றும் பின் பக்கத்தில் உள்ள சக்கரங்கள் அவர் மீது ஏறி இறங்கியது. இந்த கோர விபத்தில் மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விசாரணையில் அந்த பெண், யூசுப் குடாவில் உள்ள முதுநிலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மெஹ்ரீன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து, சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :