திமுக ஆட்சி அகற்றப்பட்ட பிறகும் குற்றங்கள் தொடர்வது கவலையளிக்கிறது - அன்புமணி

by Editor / 19-05-2026 12:50:36pm
திமுக ஆட்சி அகற்றப்பட்ட பிறகும் குற்றங்கள் தொடர்வது கவலையளிக்கிறது - அன்புமணி

புதுக்கோட்டையில் இளம்பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சி அகற்றப்பட்ட பிறகும் பெண்களுக்கு எதிரான இத்தகைய கொடூர குற்றங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது மிகுந்த கவலையளிப்பதாக அவர் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
 

 

Tags :

Share via
Logo