மீண்டும் மிரட்டவரும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி-

வங்கக் கடலில் நாளை( டிச., 07) புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக
இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த வாரம் ஃபெஞ்சல் புயல் பாதிப்பு காரணமாக விழுப்புரம், கடலூர், புதுச்சேரி கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், படிப்படியாக மீண்டு வரும் நிலையில் மீண்டும் வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும்,இதனா கனமழை உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் தமிழக கடலோர மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்துவருகிறது.
Tags : மீண்டும் மிரட்டவரும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி-