பிரதமர் வருகை.. போக்குவரத்து மாற்றம்

by Staff / 07-04-2023 04:34:57pm
பிரதமர் வருகை.. போக்குவரத்து மாற்றம்

தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்ட்ரல் - விவேகானந்தர் இல்லம் இடையே பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை வாகனங்கள் மெதுவாக செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், விவேகானந்தர் இல்லத்துக்கு பிரதமர் வரும்போது வாகனங்கள் ஆர்.கே. சாலைக்கு திருப்பி விடப்படும். போர் நினைவிடத்திலிருந்து வரும் வாகனங்கள் அண்ணா சாலை அல்லது வாலாஜா சாலைக்கு திருப்பி விடப்படும். வாகன ஓட்டிகள் தங்கள் இலக்கை அடைய மாற்றதிற்கேற்ப திட்டமிட்டுக்கொள்ளுங்கள் என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via