திருவிழாவுக்குச் சென்ற வாலிபர் கொலை வழக்கில் வாலிபர் அதிரடி கைது
மயிலம் பங்குனி உத்திர திருவிழாவுக்குச் சென்ற வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கிடங்கல்-1, பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை மகன் கோகுல்ராஜ், 31; சலுான் கடை ஊழியர். இவர் கடந்த 3ம் தேதி இரவு மயிலத்தில் நடந்த பங்குனி உத்திர திருவிழாவிற்கு வந்தவர், 4ம் தேதி காலை மயிலம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து கோகுல்ராஜ் தாய் பவானி, 55; தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக மயிலம் போலீசில் புகார் அளித்தார். அந்த பேரில், சந்தேக மரணம் பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், அப்பகுதியில் இரு சக்கர வாகன ஸ்டாண்டு வைத்திருந்த கொல்லியங்குணம் மேட்டு தெருவை சேர்ந்த மூர்த்தி மகன் ரமேஷ், 35; யாருக்கும் கோகுல்ராஜ்க்கும் ஸ்டாண்டில் பைக்கை நிறுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், ஆத்திரமடைந்த ரமேஷ் தாக்கியதில் கோகுல்ராஜ் இறந்தது தெரியவந்தது. அதையடுத்து, போலீசார், கொலை வழக்காகப் பதிந்து, ரமேஷை கைது செய்தனர்.
Tags :













.jpg)





