கலைஞர் நினைவு தினம் - கனிமொழி நெகிழ்ச்சி பதிவு

by Staff / 07-08-2023 12:43:59pm
கலைஞர் நினைவு தினம் - கனிமொழி நெகிழ்ச்சி பதிவு

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கலைஞர் நினைவு தினத்தை முன்னிட்டு திமுக எம்.பி கனிமொழி உணர்ச்சியாக வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்வீட்டர் பக்கத்தில், “தலைவர் கலைஞரின் சிந்தனைகள் காலங்களைக் கடந்து நம்மை வழிநடத்தக் கூடியவை. எக்காலத்திற்கும் பொருத்தமான அவரது கருத்துகள், இன்றைய அரசியல் சூழலிலும் கூர்மையும் பொருள் பொதிந்தும் உள்ளன. அவரை நான் எடுத்த நேர்காணலின் ஒரு சிறு பகுதி” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via