40. 26 லட்சம் மோசடி 2 பேர் கைது

by Staff / 07-04-2023 04:42:41pm
 40. 26 லட்சம் மோசடி 2 பேர் கைது

விழுப்புரத்தில், காப்பீடு திட்டத்தில் முதலீடு செய்து, இரட்டிப்பு லாபம் பெறலாம் என கூறி, பலரிடம் 40. 26 லட்சம் ரூபாய் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம், கே. கே. ரோடு, மணி நகரை சேர்ந்தவர் ரமேஷ், 52; புதுச்சேரி, முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் ரவிக்குமார், 55; தனியார் இன்சூரன்ஸ் நிறுவன மேலாளர். திருபுவனையை சேர்ந்தவர் ஸ்டாலின், 47; இவர்கள் இருவரும், ரமேஷை கடந்த 2022ம் ஆண்டு சந்தித்து, புதிய தனியார் இன்சூரன்ஸ் திட்டத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என கூறியுள்ளனர். இதனை நம்பிய ரமேஷ், கடந்த 2022ஆம் ஆண்டு இரண்டு தவணைகளில், ரூ. 1 லட்சம் ரூபாயை, ரவிக்குமாரின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளார். 26ம் தேதி, 1 லட்சத்து 88 ஆயிரம் ரூபாயை ரவிக்குமார், ஸ்டாலினிடம் நேரில் கொடுத்துள்ளார். பிறகு, ரமேஷ் தனது நண்பர் ஆண்டனியை அறிமுகப்படுத்தியுள்ளார், அவரிடமிருந்து 2 லட்சம் ரூபாய் வாங்கிக் கொடுத்துள்ளார். இதே போல், பலரிடம் ரூ. 40 லட்சத்து 26 ஆயிரத்தை ரவிக்குமார், ஸ்டாலின் இருவரும் வசூல் செய்தனர். ஆனால் கூறியபடி பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியுள்ளனர். இது குறித்து, ரமேஷ் கேட்டபோது, ​​கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். ரமேஷ் கொடுத்தபுகாரின் பேரில் வழக்கு பதிந்த விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், ரவிக்குமார், ஸ்டாலின் ஆகியோரை கைது செய்தனர்.

 

Tags :

Share via