மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயிலுக்கு இ-மெயில் மூலமாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயிலுக்கு இ-மெயில் மூலமாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. போலீசார் மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் மர்ம நபர்களை விரைந்து கைது செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.
Tags :