இன்று பல மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும்
தமிழ்நாட்டில் இன்று 23 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி நீலகிரி கோயம்புத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் கானா முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் மேற்கு மாவட்டங்களான ஈரோடு.. திருப்பூர். சேலம் .திண்டுக்கல். தேனி. தென் மாவட்டங்களான மதுரை. விருதுநக.ர் சிவகங்கை. புதுக்கோட்டை. தென்காசி மற்றும் திருநெல்வேலி போன்ற மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூ.ர் திருவாரூர். நாகப்பட்டினம். மயிலாடுதுறை போன்ற மாவட்டங்கள் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சென்னை. செங்கல்பட்டு .காஞ்சிபுரம். திருவள்ளூர் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Tags :


















