சவுக்கு மீடியா ஊழியர்கள் கைது - எடப்பாடி கண்டனம்

by Staff / 03-05-2024 02:04:16pm
சவுக்கு மீடியா ஊழியர்கள் கைது - எடப்பாடி கண்டனம்

சவுக்கு மீடியா ஊடகத்தில் பணிபுரியும் ஊழியர்களை கைது செய்யும் திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில்,‌ ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளை தன் கைகளுள் வைத்துக்கொண்டு, தான் ஏதோ நல்லாட்சி வழங்குவது போல ஒரு பொய் பிம்பத்தை உருவாக்கி, அந்த மாய உலகத்தில் ஸ்டாலின் அவர்கள் திளைத்துக் கொண்டிருப்பதை நான் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளேன். அதனையும் மீறி சில ஊடகங்கள் இந்த விடியா ஆட்சியின் அவலங்களை மக்களிடத்தில் அம்பலபடுத்தினால், தன் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையை ஏவி பொய் வழக்குகளால் முடக்க முயற்சிப்பது திமுகவிற்கே உரித்தான அராஜக பாசிச குணம் என பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via