மு.க.ஸ்டாலினுக்கு குடும்பத்தினர் அளித்த பரிசு
முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலினுக்கு அவரது குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். அதாவது, ஸ்டாலினுக்கு ஓவியம் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளனர். இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாக – தமிழக முதல்வராக நம்மை வழிநடத்தவுள்ள கழக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் இணைந்து, தலைவர் அவர்களை வாழ்த்துவது போன்ற ஓவியத்தை பரிசளித்தோம். இதனை வரைந்த ஓவியர் பிரேம் டாவின்சிக்கு அன்பும், நன்றியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags :