தெரிந்து கொள்வோம்: எலிசபெத் ஹெலன் பிளாக்பர்ன்

by Editor / 26-11-2021 12:43:14pm
தெரிந்து கொள்வோம்: எலிசபெத் ஹெலன் பிளாக்பர்ன்

சர்வதேச மருத்துவ அறிஞர் எலிசபெத் ஹெலன் பிளாக்பர்ன்  நவம்பர் 26, 1948ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா, தாஸ்மானியா தீவின் ஹோபர்ட் என்ற இடத்தில் பிறந்து ஐக்கிய அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர்.

 இவரும், இவரது உதவியாளர் கரோல் டபிள்யு கிரைடர் என்பவரும் டி.என்.ஏ.விலிருக்கும் புதிய டெலோமியர்களை ஒன்றிணைத்து அவற்றின் நீள, அகலங்களைக் கட்டுப்படுத்தும் டெலோமெரிஸ் என்ற என்சைமை வெற்றிகரமாகப் பிரித்தெடுத்தனர். இந்த அபாரமான கண்டுபிடிப்பு உலகம் முழுவதும் உள்ள உயிரியலாளர்களுக்கு மரபணு செல்களின் சிக்கலான செயல்பாடுகளையும், அவற்றை இரட்டிப்பாக்கும் தன்மையைப் புரிந்துகொள்ளவும் வழிவகுத்தது.

 நுண்ணுயிரியலுக்கான எல்லி லில்லி விருது 1988ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு தனது குழுவைச் சேர்ந்த கரோல் கிரெய்ட்டர், ஜாக் சொஸ்டாக் ஆகியோருடன் இணைந்து மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்றார். டெலோமியர்கள் மற்றும் புற்றுநோய் குறித்து இடைவிடாமல் உரையாற்றுவதிலும், கருத்தரங்குகள் நடத்துவதிலும் ஈடுபாடு உடையவர்.

 

 

Tags :

Share via