வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதன் காலமானார்
பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதன் காலமானார். அவருக்கு வயது 98. இந்தியாவில் 'பசுமை புரட்சியின் தந்தை' என அறியப்பட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதன் சென்னையில் இன்று காலமானார். வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று காலை 11.20 மணிக்கு எம்.எஸ் சுவாமிநாதனின் உயிர் பிரிந்தது. சர்வதேச அரிசி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராகவும் எம்.எஸ் சுவாமிநாதன் பணியாற்றியுள்ளார். 1925இல் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் பிறந்த எம்.எஸ் சுவாமிநாதன் அங்கு பள்ளிப்படிப்பை முடித்தார். பல்வேறு கல்லூரிகளில் பயின்ற அவர் கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் முனைவர் பட்டம் பெற்றார்.
Tags :