தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தென்காசி மாவட்டத்தில் 32 இடங்களில் நடைபெற்ற பெருநாள் தொழுகை

by Editor / 22-04-2023 11:52:01am
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தென்காசி மாவட்டத்தில் 32 இடங்களில் நடைபெற்ற பெருநாள் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தென்காசி மாவட்டத்தில் 32 இடங்களில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு. 

ரமலான் பிறை 30 நாட்கள் முடிந்ததை அடுத்து தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இன்று பெருநாள் தொழுகை நடைபெற்றது. கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில் நடைபெற்ற தொழுகையை, மாநில மேலாண்மை குழு உறுப்பினர் அப்துல் நாசிர் தலைமையேற்று பெருநாள் சிறப்பு தொழுகையை நடத்தினார். இதே போல் கடையநல்லூரில் 9 இடங்களிலும், மாவட்ட அளவில் தென்காசி, பொட்டல்புதூர், செங்கோட்டை , புளியங்குடி உட்பட 32 இடங்களிலும் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடையநல்லூர் நகர் முழுவதும் ஃபித்ரா என்னும் நோன்பு பெருநாள் தர்மம் வழங்கப்பட்டது. பின்னர் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி இனிப்புகளை வழங்கி ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.  இஸ்லாமிய மக்கள் ஒரு மாதம் நோன்பிருந்து இன்றைய தினத்தில், பெருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தென்காசி மாவட்டத்தில் 32 இடங்களில் நடைபெற்ற பெருநாள் தொழுகை
 
Tags :

Share via