கட்டுப்பாட்டை இழந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர்,நோயாளி இருவரும் உடல் நசுங்கி பலி

கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனை பகுதியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி ஆம்புலன்ஸ் ஒன்று சென்றது. அப்போது அந்த ஆம்புலன்ஸ் மேடான பகுதியில் ஏறியபோது பிரேக் பிடிக்காததால் பின்னோக்கி நகர்ந்துள்ளது. பின் கட்டுப்பாட்டை இழந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் காளிதாஸ், நோயாளி ஆகிய இருவரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த வால்பாறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags :