கேப்டன் விஜயகாந்த்-ன் மறைவு- தலைவர்கள் இரங்கல்

by Editor / 28-12-2023 11:27:05am
கேப்டன் விஜயகாந்த்-ன் மறைவு- தலைவர்கள் இரங்கல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி இரங்கல்

அரசியல் மற்றும் சினிமாவிற்கு விஜயகாந்த் ஆற்றிய பங்களிப்பு லட்சக்கணக்கான இதயங்களில் அழியா முத்திரையாக உள்ளது

துயரமான இந்த நேரத்தில் விஜயகாந்தின் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

- ராகுல் காந்தி

பசிப்பிணி போக்கிய மாமனிதர் விஜயகாந்த்: பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம்


எனது நண்பர்
கேப்டன் விஜயகாந்த்-ன் மறைவு மிகுந்த துயரமும், வேதனையும் அளிக்கின்றது; 
விஜயகாந்த்-ன் மறைவு எங்கள் தமிழ் திரைப்படத் துறைக்கு பேரிழப்பாகும்; அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”

- இயக்குநர் பாரதிராஜா இரங்கல்


உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர்,சகோதரர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மனவேதனை அடைந்தேன்;

நல்ல திரைப்படக்கலைஞர்; நல்ல அரசியல் தலைவர்; நல்ல மனிதர்; நல்ல சகோதரர்; ஒட்டுமொத்தமாக ஒரு நல்லவரை நாம் இழந்து இருக்கிறோம்;சகோதரர் விஜயகாந்த் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்”

- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் பதிவு.


 தேமுதிக தலைவர் அண்ணன் கேப்டன் விஜயகாந்தின் மறைவுச் செய்தியைக் கேட்டு மிகுந்த துயருற்றேன்;
அவரது மறைவு தமிழ் சினிமாவுக்கும் தமிழ்நாடு அரசியலுக்கும் பேரிழப்பு;விஜயகாந்தை பிறந்து வாடும் அவரது குடும்பத்தினர், கட்சி தோழர்கள், ரசிகர்கள், திரையுலகினர் ஆகிய அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்”- விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல் பதிவு.

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், அன்பு சகோதரருமான விஜயகாந்த  உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்;

 அவரை இழந்துவாடும் அன்னாரது மனைவியும்  தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் , குடும்பத்தினர் மற்றும் அவரது தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்;

பொதுவாழ்விலும், கலைத்துறையிலும் செயற்கரிய பல செயல்கள் செய்துள்ள, மக்களால் அன்போடு கேப்டன் என்று அழைக்கப்படும் .விஜயகாந்த் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்”- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

 

தேமுதிக தலைவர் அண்ணன் கேப்டன் விஜயகாந்தின் மறைவுச் செய்தியைக் கேட்டு மிகுந்த துயருற்றேன்;

அவரது மறைவு தமிழ் சினிமாவுக்கும் தமிழ்நாடு அரசியலுக்கும் பேரிழப்பு;

விஜயகாந்தை பிறந்து வாடும் அவரது குடும்பத்தினர், கட்சி தோழர்கள், ரசிகர்கள், திரையுலகினர் ஆகிய அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்”

- விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல் பதிவு

 

 

Tags : கேப்டன் விஜயகாந்த்-ன் மறைவு- தலைவர்கள் இரங்கல்

Share via