பாம்பன் கடலின் நடுவே கட்டப்பட்டுள்ளபுதிய ரயில் பாலத்தின் திறப்பு விழா.

by Editor / 05-04-2025 05:16:31pm
பாம்பன் கடலின் நடுவே கட்டப்பட்டுள்ளபுதிய ரயில் பாலத்தின் திறப்பு விழா.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தின் திறப்பு விழா நாளை (ஏப். 06) நடக்கிறது. பிரதமர் மோடி கலந்து கொண்டு புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார். ராமேஸ்வரம் மண்டபத்தில்  காலை 11:50 மணியளவில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் பிரதமர் மோடி காரில் புறப்பட்டு பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் அமைந்துள்ள மேடைக்கு சென்று புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார். ராமேஸ்வரம் - தாம்பரம் ரயில் போக்குவரத்தை தொடங்கி வைத்த பின்னர் ராமநாதசுவாமி கோயிலுக்கு செல்கிறார். தொடர்ந்து அரசு தங்கும் விடுதி வளாகத்தில் பாம்பன் பாலம் திறப்பு விழா நிகழ்ச்சியில் பேசுகிறார்.

 

Tags : பாம்பன் கடலின் நடுவே கட்டப்பட்டுள்ளபுதிய ரயில் பாலத்தின் திறப்பு விழா.

Share via

More stories