நட்பு பாராட்டும் சிறந்த நண்பர்: ஜெயக்குமார்

by Staff / 25-08-2024 04:36:18pm
நட்பு பாராட்டும் சிறந்த நண்பர்: ஜெயக்குமார்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் பதிவில் விஜயகாந்த் பிறந்தநாளில் அவர் குறித்தான நினைவை பகிர்ந்துள்ளார். "எப்போதும் எளிமையுடனும், அளவிட முடியாத அன்புடனும் பழகும் பண்பு. நான் சட்டப்பேரவை தலைவராக இருந்த காலத்தில் இருவரும் சந்தித்து கொள்ளும் நேரமெல்லாம் என்னிடம் நட்பு பாராட்டும் சிறந்த நண்பர். பாசமிகு சகோதரர் கேப்டன் அவர்களின் பிறந்தநாளில் அவரின் தியாகத்தை போற்றி வணங்குவோம்" என பதிவிட்டுள்ளார்.
 

 

Tags :

Share via