வங்கியில் ஜீரோ பேலன்ஸ்.. திருமாவளவன் சொத்துமதிப்பு இதுதான்
நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனின் சொத்துமதிப்பு வெளியாகியுள்ளது. திருமாவளவன், தனது கையிருப்பில் 10,000 ரூபாய் பணம் ரொக்கமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தனக்கு 4 வங்கிக் கணக்குகள் இருப்பதாகவும் சென்னை இந்தியன் வங்கி கிளையில் உள்ள கணக்கில் ஜீரோ பேலன்ஸ் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவரது முழு சொத்து மதிப்பு ரூ. 2.43 கோடி என்றும். அதில் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ. 2.07 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அசையா சொத்து ரூ. 36.57 லட்சம் என்றும் கூறப்பட்டுள்ளது.
Tags :