முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அப்போலோ மருத்துவமணியில் அனுமதி.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் காரணமாக தமிழக அரசியல் கட்சிகள் தீவிர களப்பணிகளை முன்னெடுத்து வருகிறது.தேர்தல் தொடர்பாக அதிமுக தலைவர்கள் தீவிரமாக களப்பணியியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கலில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் கட்சியின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார்.
நேற்று சென்னை திரும்பினார். இந்த நிலையில், சென்னையில் உள்ள திண்டுக்கல் சீனிவாசன் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உணவு ஒவ்வாமை காரணமாக அவதிப்பட்டதன காரணமாக அவர் சென்னை கீரீம் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகதகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags : முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அப்போலோ மருத்துவமணியில் அனுமதி.