தொகுதி பங்கீட்டில்வாய்ப்பு பெறாத தோழமை கட்சி ஆதரவு: ஸ்டாலின்

by Staff / 19-03-2024 05:37:13pm
தொகுதி பங்கீட்டில்வாய்ப்பு பெறாத தோழமை கட்சி ஆதரவு: ஸ்டாலின்

நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல் களத்தில் இண்டியா கூட்டணி மகத்தான வெற்றி அடைந்திடவும், மத்தியில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிடவும் தங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன். ஒன்றுபட்டு நிற்போம், வென்றுகாட்டியே தீருவோம் என்று திமுக தலைமையிலான இண்டியா கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ள கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காக்கவும், மதவெறி சக்திகளை வீழ்த்தி மதநல்லிணக்கம் தழைக்கவும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயகத்தை மீட்கவும் ‘இண்டியா’ கூட்டணியை 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்கிற ஒரே இலக்குடன் திமுகவுடன் இணைந்து நிற்கும் தோழமைக் கட்சியினர் அனைவரையும் வரவேற்கிறேன்.கடந்த 10 ஆண்டுகாலமாக மத்தியில் ஆட்சி செய்த பாஜக அரசின் மக்கள் விரோத, மாநில உரிமைகளைப் பறித்த ஆட்சியை விரட்டிட, 2024 மக்களவைத் தேர்தல் களமே சரியான வாய்ப்பாகும் என்கிற உறுதியான நம்பிக்கையுடன் இண்டியா கூட்டணியில் திமுகவுக்குத் தோள் கொடுக்கும் தோழமைக் கட்சிகளுடன் களத்தைச் சந்திக்கிறோம்.

 

Tags :

Share via

More stories