அசாமில் நிலநடுக்கம்
நவ்கான் மாவட்டத்தில் நேற்று பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4 ஆக பதிவானது. இந்நிலையில், அப்பகுதியில் திங்கள்கிழமை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், திங்கள்கிழமை காலை 11.57 மணியளவில் பிரம்மபுத்திராவின் தெற்கு கரையில் உள்ள நவ்கான் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்திலும், ஹொஜாய் நகருக்கு அருகில் உள்ள கவுஹாத்தியில் இருந்து கிழக்கே 180 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள் சேதம் குறித்தோ, உயிர் சேதம் குறித்தோ தகவல் வெளியாகவில்லை. நவ்கான் மாவட்டம் மட்டுமன்றி, மேற்கு கர்பி ஆங்லாங், கர்பி ஆங்லாங், கோலாகாட், மோரிகான், சோனித்பூர் ஆகிய மாவட்டங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
Tags :