திருவாரூரில் மருத்துவமனையில் பெண் உயிரிழந்த விவகாரம்.துணை முதல்வர் தலைமையில் விசாரணை நடத்த முதல்வர் உத்தரவு.
திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பிறந்து மூன்று நாட்கள் ஆன பர்வீன் பானு என்கிற பெண் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர்கள் யாரும் அப்போது பணியில் இல்லை என்று உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜோசப் ராஜ் கூறுகையில் உயிரிழந்த பெண்ணிற்கு ஏற்கனவே இருதய கோளாறு இருந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மயக்கம் ஏற்படும்போது உடனடியாக அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு பணியில் இருந்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்ததாகவும் சிகிச்சை பலனின்றியே அவர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் இது குறித்து மருத்துவ கல்லூரி துணை முதல்வர் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடத்தவும் அவர் உத்தர விட்டிருக்கிறார்.
Tags :