அ.தி.மு.க சட்டமன்ற துணைத் தலைவராக  ஆர். வி. உதயகுமார். இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது .

by Admin / 14-02-2024 10:42:46am
  அ.தி.மு.க சட்டமன்ற துணைத் தலைவராக  ஆர். வி. உதயகுமார்.  இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது .

அ.தி.மு.க ஒ. பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிச்சாமி பிரிவிற்கு முன்பாக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமியும் துணை தலைவராக ஓ பன்னீர்செல்வமும் இருந்து வந்தனர். இந்நிலையில், அதிமுகவிற்குள் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ. பன்னீர் செல்வத்திற்கும் இடையே ஏற்பட்ட கருத்தும் முரண்பாடு காரணமாக இருவரும் தனித்தனியாக பிரிந்து கட்சியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான முயற்சியில் நீதிமன்றங்களை நாடினர். எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழுவை க்கூட்டி அ.தி.மு.கவின் பொதுச் செயலாளரானர்.. ஓ. பன்னீர்செல்வம் அ.தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருந்து அதிமுகவினுடைய துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர். வி. உதயகுமாரை தேர்ந்தெடுத்து இருப்பதாக சட்டமன்ற தலைவர் அப்பாவுவிடம் கோரிக்கை வைத்தனர்.. ஆனால், நீண்ட நாட்கள் ஆகி தொடர்ந்து பரிசளிக்கப்படாமல் இருப்பதை எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு நிலைகளில் அவையில் சுட்டிக்காட்டினார். நேற்று  தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் தொடர்ந்து அ.தி.மு.கவால் சட்டமன்ற துணைத் தலைவர் இருக்கை குறித்த செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததை அடுத்து சட்டமன்ற தலைவர் இது குறித்து பாிசீலித்து உடனடியாக இப்பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று  கோரிக்கை விடுத்திருந்தார் .அவர் கோரிக்கையை ஏற்று  அ.தி.மு.க சட்டமன்ற துணைத் தலைவராக  ஆர். வி. உதயகுமார் சட்டமன்றத்தில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது  முன்னாள் முதலமைச்சா்  ஒ. பன்னீர்செல்வதிற்கு இரண்டாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்.

 

Tags :

Share via