மருத்துவக் கல்லூரிகளில் காலி இடங்களை நிரப்ப 30ஆம் தேதிக்குள் சிறப்புக் கலந்தாய்வு-உச்ச நீதிமன்றம்
மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வரும் 30ஆம் தேதிக்குள் சிறப்புக் கலந்தாய்வை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல பணியிடங்கள் காலியாக இருப்பதால், நிதிப் பற்றாக்குறையை சந்திப்பதாக தனியார் கல்லூரிகள் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. எனினும், ஏற்கனவே விண்ணப்பித்து காத்திருப்பு பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே சிறப்புக் கலந்தாய்வில் வாய்ப்பு அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : மருத்துவக் கல்லூரிகளில் காலி இடங்களை நிரப்ப 30ஆம் தேதிக்குள் சிறப்புக் கலந்தாய்வு-உச்ச நீதிமன்றம்