சட்டப்பேரவையில் சீட்டை பறிகொடுத்த ஓபிஎஸ்.. சாதித்த இபிஎஸ்

by Staff / 14-02-2024 10:54:25am
சட்டப்பேரவையில் சீட்டை பறிகொடுத்த ஓபிஎஸ்.. சாதித்த இபிஎஸ்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை உதயகுமாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியின் கோரிக்கையை பரீசிலிக்கும்படி முதல்வர் ஸ்டாலின் நேற்று சபாநாயகரிடம் கேட்டிருந்தார். முதல்வரின் கோரிக்கையை ஏற்று சட்டப்பேரவையில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் இடத்தை உதயகுமாருக்கு ஒதுக்கியுள்ளார் சபாநாயகர். 2வது வரிசையில் முன்னாள் சபாநாயகர் தனபால் இருக்கைக்கு அருகே ஓபிஎஸ்க்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via