முதல் முறையாக ஹைட்ரஜன் மூலம் இயங்கும் பறக்கும் படகை அறிமுகப்படுத்தியுள்ளது.

by Admin / 31-01-2022 11:41:18am
முதல் முறையாக ஹைட்ரஜன் மூலம் இயங்கும் பறக்கும் படகை அறிமுகப்படுத்தியுள்ளது.

துபாயில் சுவிட்சர்லாந்து தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அமீரக நிறுவனத்தின் கூட்டு முயற்சியால் , தி ஜெட் என பெயர் கொண்ட  பறக்கும் படகினை அறிமுகப்படுத்தியுள்ளது. 

சொகுசு படகாக இவை இருக்கும் என சொல்லப்படுகிறது மேலும் இந்த பறக்கும் படகில்  8 பேர் முதல் 12 பேர் வரை பயணிக்க முடியும் என  கூறப்படுகிறது.

இதில் இரண்டு வகையான எரிபொருள் செல்கள் பொருத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர்.
 
இந்த பறக்கும் படகினை விரைவில் துபாய் கடல் பகுதிகளில் காணலாம் என அதன் தயாரிப்பாளர்கள் அறிவித்து உள்ளனர். 

இந்த படகு குறித்து அவர்கள் தெரிவிக்கையில் இதனை இயக்கும் போது சத்தம் வருவது இல்லை மேலும் இது தண்ணீருக்கு 80 செ.மீ உயரத்திற்கு மேல் பறந்து செல்லும் எனவும் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்குவதால் இதிலிருந்து புகை போன்ற உமிழ்வுகள் வெளியேறுவதில்லை என கூறுகின்றனர்.

இந்த படகானது சுற்றுசூழலுக்கு உகந்ததாக இருக்கும் எனவும் மணிக்கு 75 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டவை இதனை விரைவில் துபாய் கடல் பகுதிகளில் ஜெட் படகு செல்லும் காட்சியை அனைவரும் காணலாம் என தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via