எடப்பாடி பழனிச்சாமி சசிகலா காலில் விழுந்து பதவியைப் பெற்றவர் - உதயநிதி ஸ்டாலின்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சசிகலா காலில் விழுந்து பதவியைப் பெற்றவர் என்று தேர்தல் பரப்புரையின் போது பேசினார் ..அதற்கு எடப்பாடி பழனிச்சாமி முன்வைத்த செய்தி, பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி பெறுவது என்பது தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் மரபின் ஒரு பகுதி என்றும் புதிதாக திருமணமானவர்கள் பெரியவர்களின் காலில் விழுந்த ஆசி பெறுவதையும் வேலை வாய்ப்பு கிடைத்தவர்கள் பெற்றோரின் காலில் விழுந்து வணங்குவதையும் உதாரணங்களாக சுட்டி காட்டினார் .தனக்கு ஒரு பொறுப்பு அல்லது பதவியே கிடைக்கும் போது உதவி செய்துவிடும் ஆசி பெறுவது தனது பண்பு என்றும் அதற்காகவே சசிகலா காலில் விழுந்து வணங்கியதாகவும் அவர் விளக்கம் அளித்தார். தேர்தல் பிரச்சார கூட்டங்களில் உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவின் காலில் விழும் புகைப்படத்தை காட்டி விமர்சித்து வரும் நிலையில் இந்த விளக்கத்தை எடப்பாடி பழனிச்சாமி அளித்துள்ளார்.
Tags :



















