லாரியில் லாவகமாக கஞ்சா கடத்திய இரண்டு இளைஞர்கள் கைது.
திருப்பத்தூர் மாவட்டம், சிம்மனபுதூர் அடுத்த கோடியூர் பகுதியைச் சேர்ந்த ஜெய்சங்கர் மகன் ரவீந்திரன் (24), குரும்பேரி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் பூபாலன் (29) ஆகிய இருவர் டிவிஎஸ் பார்சல் ஓட்டுநராக வேலை செய்து வரும் நிலையில் ஒரிசாவில் இருந்து திருப்பத்தூருக்கு கஞ்சா கடத்தி வந்த நிலையில் தகவலின் அடிப்படையில் இருவர் கைது. அவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து கிராமிய காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : 6 கிலோ கஞ்சா பறிமுதல்! போலிசார் தீவிர விசாரணை



















